தகவல் சுரங்கம் : நெல்சன் மண்டேலா தினம்
தகவல் சுரங்கம்நெல்சன் மண்டேலா தினம்தென்னாப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த நெல்சன் மண்டேலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (1918, ஜூலை 18), ஐ.நா. சார்பில் உலக நெல்சன் மண்டேலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்க அரசுக்கு எதிராக இவரது தலைமையில் போராட்டங்கள் நடந்தன. இதனால் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்ய உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. 1990 பிப்., 11ல் விடுதலையானார். 1994 மே 10ல் அந்நாட்டின் அதிபரானார்.