தகவல் சுரங்கம் : ஜனாதிபதி ஆட்சி அமலாகாத மாநிலம்
தகவல் சுரங்கம்ஜனாதிபதி ஆட்சி அமலாகாத மாநிலம்சட்டசபையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக மாநிலங்களில் 'ஜனாதிபதி ஆட்சி' (அரசியலமைப்பு சட்ட விதி 356) அமல்படுத்தப்படும். ஆறு மாதம் அமலில் இருக்கும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் நீடிக்கலாம். ஆனால் 6 மாதத்துக்கு ஒருமுறை பார்லிமென்ட் அனுமதி தேவை. இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட மாநிலம் மணிப்பூர் (12 முறை). அடுத்த இடங்களில் உ.பி., (9), பஞ்சாப் (8) உள்ளன. இதுவரை இந்த விதி ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத மாநிலம் சத்தீஸ்கர், தெலுங்கானா.