தகவல் சுரங்கம் : பெரிய ரயில் நிலையம்
தகவல் சுரங்கம்பெரிய ரயில் நிலையம்மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் உள்ளது ஹவுரா ரயில் நிலையம், இது நாட்டிலேயே பெரியது, பிசியானது. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இங்கு 1854 ஆக. 15ல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பரப்பளவு 70 ஏக்கர். தற்போது தினமும் 600 ரயில்கள் (நீண்டதுார, புறநகர் பயணிகள், சரக்கு ரயில் உட்பட), இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 24 பிளாட்பார்ம்கள் உள்ளன. இங்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தும் உள்ளது. இதனருகே 2006ல் ரயில் மியூசியம் திறக்கப்பட்டது.