வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Good
Computer, software are will take new version
மின்சாரத்தை கடத்தும் புதிய பாக்டீரியா இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயிரி மின்னணுவியல் மற்றும் மாசு சுத்திகரிப்பில் இந்த நுண்ணுயிரி உதவக்கூடும். சி.ஏ., எலக்ட்ரோத்ரிக்ஸ் யாகோனென்சிஸ் எனப்படும் இந்த நுண்ணுயிரி, நீண்ட துாரம் எலக்ட்ரான்களை கடத்தும், 'கேபிள் பாக்டீரியா' இனத்தைச் சேர்ந்தது.இதன் செல்கள், நுண் இழை போல பிணைந்துள்ளன. இந்த இழையில் எலக்ட்ரானைக் கடத்தும் திறனுள்ள ஒரு சவ்வு மூடி உள்ளது. மேற்பரப்பின் அடியோரத்தில், நிக்கல் மூலக்கூறால் ஆன மின் கடத்தும் இழைகள் உள்ளன. மனிதர்களுக்கு நச்சு உலோகமான நிக்கல், இந்த பாக்டீரியாவிற்கு மின்கடத்தும் திறமையைத் தந்துள்ளது. “இந்த புதிய நுண்ணுயிரியை ஆராய்ந்தால், கேபிள் பாக்டீரியாக்கள் எப்படி உருவாயின என்பதை அறிய முடியும்,” என்கிறார் ஆய்வுக்குத் தலைமை தாங்கிய செங் லி.மின்சாரம் கடத்தும் பாக்டீரி யாக்கள், சேறு நிறைந்த பகுதியில், பிற உயிரிகளுக்கு ஊட்டச் சத்துக்கள், ஆக்சிஜன் ஆகியவற்றை பரவலாக்க உதவுகின்றன. மேலும், மாசுகளை சிதைத்து வெளியேற்றவும் உதவுகின்றன. வருங்காலத்தில், பரவலாகப் போகும் உயிரி மின்னணுவியல் (Bioelectronics) கருவிகளை இயக்க, இவை உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Good
Computer, software are will take new version