உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., உண்டாக்கும் செல்வத்தை, அரசுகள் மக்களுக்கு மடைமாற்ற வேண்டும்

செயற்கை நு ண்ணறிவின் பரவலால், 2030களில் உலக பொருளாதாரத்தில் அதிரடியான மாற்றங்கள், நிகழும். எனவே, இந்த காலகட்டம் மிகப்பெரும் தொந்தரவுகள் நிறைந்த காலமாக இருக்கும். இன்று 20 வயதில் இருப்பவர்கள் தங்கள் 40 வயதை எட்டும்போது, நாம் இன்று பார்க்கும் பல வேலைகள் இருக்காது. குறிப்பாக, இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., சேவைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மறைந்துவிடும். எனவே, 25 கோடி இந்திய இளைஞர்கள் இனி வெறும் பணியாளர்களாக இருக்காமல், உலகிற்கு ஏ.ஐ., சார்ந்த தயாரிப்புகளை விற்பனை செய்பவர்களாக மாறவேண்டி வரும். அவையே நல்ல வேலைகளாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இணையாக இந்தியா தனது சொந்த 'இறையாண்மை கொண்ட ஏ.ஐ., மாடல்களை' உருவாக்குவதுதா ன், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.

இரண்டு அலைகள்

இரண்டு கட்டங்களாக ஏ.ஐ., புரட்சி நிகழும். முதல் அலை மனித அறிவுக்கு, ஏ.ஐ., மாற்றாக அமையும். 2030-க்குள் கணக்கியல், மருத்துவம், சட்டம், சில்லு வடிவமைப்பு போன்ற பல நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளை ஏ.ஐ., பணியாளர்கள் மிகச்சிறப்பாகச் செய்வர். இரண்டாம் அலை, மனித உடல் உழைப்புக்கு மாற்றாக ரோபோக்களின் 'உடல்' உழைப்பு வந்துவிடும். வீட்டு வேலைகள் முதல் தொழிற்சாலைப் பணிகள் வரை அனைத்தும் ரோபோக்களே செய்து தரும். இதனால் ஒரு மணி நேர உழைப்பிற்கான செலவு 100 ரூபாலிருந்து 10 ரூபாயாகக் குறையும். உழைப்பு மலிவாகும் போது, 2035-ல் உலகளவில், பணவீக்கம் வெகுவாகக் குறையும். அதற்கு பதிலாக, 'பணவாட்டப் பொருளாதாரம்' உருவாகும்.

கொடுக்கும் கொள்கை

எல்லா துறைகளிலும், உற்பத்தித் திறனை ஏ.ஐ., பலமடங்கு பெருக்கித் தரும். இதனால், மக்கள் தொகையில் 1 சதவீதத்தினரிடமே செல்வம் குவியும் இன்றைய நிலை போலவே அன்றும் இருக்கும். ஏ.ஐ., அள்ளித் தரும் பொருளாதார பலன்களை மக்களுக்கு சென்று சேரும்படி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளே மக்களின் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கும். ஏ.ஐ., மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான கல்வி, மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட வாழ்வாதார சேவைகளை கிட்டத்தட்ட இலவசமாக வழங்க முடியும். ரோபோக்கள் வாகன ஒட்டிகளாகும்போது போக்குவரத்தும். விவசாயத்தில் ரோபோக்கள் பணி செய்கையில் உணவுப் பொருட்களின் விலையும் அதிரடியாகக் குறையும். தொழில்நுட்பம் வழங்கும் இந்த அபரிமிதமான பலன்களை அரசு சரியான முறையில் மறுபகிர்வு செய்து, அனைவருக்கும் உயர்தரமான அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

வேலையும் கல்வியும்

இனி 'தொழில்' (Career) என்ற பழைய கருத்தாக்கம் நீடிக்காது. எனவே, மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் முடங்கக் கூடாது. பொறியியல் படிக்கும்போதே நரம்பியல் அல்லது மருத்துவம் போன்ற பல தரப்பட்ட பாடங்களைக் கற்க வேண்டும். ஏ.ஐ., சூழ்ந்த நிச்சயமற்ற உலகில், ஆக்கப்பூர்வமாகவும், விமர்சன பூர்வமாகவும் சிந்திப்பது எப்படி, 'கற்பது எப்படி' என்பதைப் பழகுவதே எதிர்காலத்தின் முதன்மையான தகுதியாக மாறும். இந்தியா இந்த மாற்றத்தை உணர்ந்து செயல்பட்டால், உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஏ.ஐ., ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. விநோத் கோஸ்லா, நிறுவனர், சன்மைக்ரோ சிஸ்டம்ஸ் மற்றும் கோஸ்லா வென்ச்சர்ஸ நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ் போட்காஸ்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balan Palaniappan
பிப் 28, 2026 08:37

This should exactly be the strategy of govenment when people lose job due to AI. First government should tax the companies making extraordinary profit using AI and pass it on yo the welfare of the society like the 100 days job guarantee scheme now in practice, though it is idiotic yo have it now as it eats away government kitty. Number two will be companies should engage people to do creative and reasearch works and solve them gor real world problems like global warming, poverty alleviation, nature farmint etc. Taxing will be required for the transition period when people will go without jobs. Once it stabilises government should review and change strategy accordingly.