உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. குடல் நுண்ணுயிரிகளுக்கும் மனஅழுத்தம், அல்சைமர் நோய்க்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே நடந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன. தற்போது ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலை குறிப்பிட்ட சில குடல் நுண்ணுயிரிகளுக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது. இதன் வாயிலாக, எதிர்காலத்தில் ஆட்டிஸம் நோய்க்கான மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

02. சீனாவில் உள்ள ஷாங்காய் பல்கலை 6 கால்களைக் கொண்ட, சென்சார்கள் பொருத்தப்பட்ட நாய் வடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இது கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 03. காற்றிலிருந்து வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சிக்கு பில் கேட்ஸ் உதவ உள்ளார். கரியமில வாயுவுடன் நீரிலிருந்து பிரிக்கப்பட்ட ஹைட்ரஜனை இணைத்துக் கொழுப்புகளை உருவாக்கும் இந்த முயற்சியால் கால்நடைகளை அதிகளவு நம்பி இருப்பது குறையும். 04. நெதர்லாந்தைச் சேர்ந்த கே.டபிள்யூ.ஆர்., ஆய்வு மையம், நகரங்களில், செயற்கையாக அமைக்கப்படும் மைதானங்களைக் குளுமையாக வைப்பதற்கு, அவற்றின் கீழே மழைநீரைச் சேமித்து வைக்கும் முறையை உருவாக்கி உள்ளது. 05. மாவுச் சத்தை உட்கொண்டால் தான் நம் உடல் அதை ஜீரணிக்க இன்சுலின் சுரக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது கனடாவில் உள்ள யுபிசி பல்கலை மேற்கொண்ட ஆய்வில், சிலருக்கு மாவுச் சத்து மட்டுமன்றி கொழுப்பு, புரதம் ஆகியவற்றை உட்கொள்ளும்போதும் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாவது கண்டறியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !