ADDED : பிப் 20, 2025 07:51 AM | ADDED : பிப் 20, 2025 07:51 AM
01. குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர். இது நம் பூமியைப் போல் 78.5 மடங்கு நிறையை உடையது. இதற்கு TOI-6038A b என்று பெயரிடப்பட்டுள்ளது.
02. மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதை அறிவோம். மஞ்சளில் உள்ள குர்குமினைக் கொண்டு ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூட கொல்ல இயலாத நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.
03. தாவரங்களுக்கு ஏற்படும் காயங்களைச் சரி செய்யும் வகையிலான நுண்ணுயிர்களை அடிப்படையாகக் கொண்ட பேண்ட் எய்டை (Band aid) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
04. அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி பல்கலை மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் உள்ள பாலைவனங்களில் 16 புதிய வெட்டுக்கிளி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
05. பிரபஞ்சத்தில் உள்ள வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.