உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கொன்சின் மேடிசன் பல்கலை விஞ்ஞானிகள், உலக அறிவியல் வரலாற்றின் முதன்முறையாக 3டி பிரின்டிங் முறையில் மனித மூளை திசுக்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மூளை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மனித மூளையின் செயல்பாடுகளை விரிவாக அறிந்துகொள்ளவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.02. நாசாவால் அனுப்பப்பட்ட 'பெர்சீவரன்ஸ் ரோவர்' செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. பூமிக்கும் சூரியனுக்கு நடுவே சந்திரன் வரும்போது நமக்குச் சூரிய கிரகணம் ஏற்படும். அதுபோல் செவ்வாயின் நிலவுகள் சூரியனை மறைத்து கிரகணத்தை ஏற்படுத்துகின்றன. உருளைக் கிழங்கு வடித்தில் இருக்கும் போபோஸ், செவ்வாய் துணைக்கோள். இது பிப்ரவரி 8ம் தேதி சூரியனை மறைத்து கிரகணத்தை ஏற்படுத்தியது. இதை பெர்சீவரன்ஸ் ரோவர் படமெடுத்து அனுப்பியுள்ளது.

03. வியாழனின் மூன்றாவது பெரிய துணைக்கோள் ஐ.ஒ., (Io). இதை நாசாவின் ஜுனோ விண்கலம் முன்பே படம் எடுத்துள்ளது. அதன் வாயிலாக அங்கு ஏராளமான எரிமலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய புதிய படத்தில் இதுவரை அறியப்படாத இரண்டு எரிமலை வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !