ADDED : மார் 14, 2024 10:48 AM | ADDED : மார் 14, 2024 10:48 AM
01. கடலில் வாழும் பாசிகள் ஒரு தனி வகை பச்சையத்தைக் கொண்டுள்ளன. இந்தப் பச்சையத்தை உற்பத்தி செய்யும் மரபணுவை எடுத்து நிலத்தில் வாழும் தாவரங்களுக்கும் பொருத்த முடியும். அப்படிச் செய்தால் அவற்றின் ஒளி ஈர்க்கும் திறன் அதிகமாகும். இதனால், தாவரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.. இளைஞர்களிடைய திடீரென்று மாரடைப்பு ஏற்படுத்துவது 'மையோகார்டிடிஸ்' நிலை ஆகும். இதற்கு வைரஸ்கள் தாக்கும்போது நம் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் துாண்டப்பட்டு, அதனால் ஏற்படும் வீக்கமே காரணம் என, இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராலின் ஆய்வு மையம் வைரஸ்களே நேரடியாக இதய தசைகளைத் தாக்குவதால் தான் இந்த நிலை ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.. வயிறு, உணவுக்குழாய் உள்ளிட்ட பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த பின் பலருக்கு அவற்றில் அமிலக் கசிவு ஏற்படும். இதைக் கண்டறிய, உலோகத் தகடுகள் பதித்த சிறிய ஸ்டிக்கர் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலை வடிவமைத்துள்ளது. அமிலம் பட்டவுடன் விரிகின்ற ஹைட்ரோ ஜெல், கசிவைக் காட்டிக் கொடுக்கும்.. அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், 12 வாரங்கள் தொடர்ந்து குண்டலினி யோகம் பயிற்சி செய்வது நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல மூளை தொடர்பான நோய்களைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது.05. சமீபத்தில் 3டி பிரின்டிங் முறையில் ஜெர்மனியில் 6,600 சதுர அடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெறும் 140 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடம் தான், 3டி பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பெரிய கட்டடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.