உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

1. சிறிய மரங்கொத்திப் பறவைகளுக்கு எப்படி ஆற்றல் கிடைக்கிறது? அவற்றின் அலகு, சுவாச அமைப்பு, இடுப்பு, கழுத்து தசைகள், வால் என சகலமும் ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான். தங்கள் எடையைவிட, 30 மடங்கு அதிக விசையுடன் அவை மரங்களைக் கொத்துகின்றன என்கிறது 'ஜர்னல் ஆப் எக்பெரிமென்டல் பயாலஜி' இதழ். 2. சிம்பன்ஸி குரங்குகள், புதிய ஆதாரங்கள் கிடைத்தால், அவை தங்கள் முந்தைய நம்பிக்கைகளைத் திருத்திக்கொள்கின்றன என்கிறது, 'சயன்ஸ்' இதழில் வெளியான ஓர் ஆய்வு. இது, பகுத்தறியும் சிந்தனைத் திறன், மனிதர்களுக்கு மட்டுமே உண்டு என்ற கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. 3. கொலராடோ பல்கலை கணினி விஞ்ஞானிகள், விலங்குகளின் தோலின் மேலுள்ள, ஒழுங்கற்ற புள்ளிகளையும் கோடுகளையும் ஆராய்ந்தனர். ஆய்வின் முடிவில், அந்த வடிவங்கள், சீரற்றவை அல்ல, உயிருள்ள திசு இயக்கவியலின் விளைவாக உருவாகும், கணித ரீதியில் 'ஒழுங்கான' வடிவங்களே என்பதை கண்டறிந்தனர். 4. மோனாஷ் பல்கலை ஆய்வாளர்கள், 36 வகை பாம்புகள் கடிப்பதை, 'ஸ்லோ மோஷனில்' படம் பிடித்தனர். ஆய்வின் முடிவில், ஒவ்வொரு பாம்புக்கும் விஷப்பல் அமைப்பும், இரையை கடித்து விஷத்தை செலுத்தும் விதமும் வெவ்வேறாக இருப்பதை கண்டறிந்தனர். 5. பெரிய கருப்பு எறும்புக் கூட்டத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால், அவை தங்கள் கூட்டின் சுரங்கப்பாதைகளை அகலப்படுத்துகின்றன. வரிசையில் ஊறும்போது இடைவெளி விடுகின்றன. இது மனிதர்கள்பெருந்தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு இணையானது என்கின்றனர், பூச்சியியல் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !