உள்ளூர் செய்திகள்

காமெடி வித் கிங்காங் காளை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்ல, பேட்டிக்கும் நான் ரெடியாத்தான் இருக்கேன்... என்னையும் இன்டர்வியூ பண்ணுங்க என்று, கொம்புடன் வம்பு பண்ணிய 'கிங்காங்' காங்கேயம் காளை'யுடன் ஒரு காமெடி பேட்டி...* எங்களுக்காக ஒரு பாட்டு...'பொங்கல் வந்தாலே காலு நாலும் தன்னாலே வாடி வாசல் பாயுதே...', இது உங்களுக்காக இல்லை பொங்கலுக்காக பாடுனது.* மா...மா...ன்னு கேப் விட்டு கத்துறீங்க ?கேப் விடலேன்ன 'மாடுலேஷன்' மாறி 'மாமா'ன்னு வருமய்யா... அப்புறம் மாடு 'மாமா'ன்னு கத்துதுன்னு 'நியூஸ்' போடுவீங்க...* ஏன் டென்ஷன், என்ன சாப்டீங்க...என்னமோ பீட்சா, பர்கர் சாப்பிடுற மாதிரி கேட்குறீங்க... புண்ணாக்கும், புல்லும் சாப்பிட்டு நாக்கெல்லாம் புண்ணு, ஒரு சேஞ்சுக்கு நீங்க சாப்பிடுற 'புல்'லை கொடுங்களேன்.* திமில் பெருசா இருக்கே...'திமில்' பெருசா இருக்கலாம்... நான் தான் பெருசுங்குற 'திமிர்' தான் இருக்கக் கூடாது.* ஜாலியா இருக்கீங்களே...மூக்கணாங் கயிறை கட்டி, அதுல ஒரு கயிறை லின்க் பண்ணி, அப்படியே ஏன் காலுக்கு எக்ஸ்ட்ரா லின்க் அடிச்சிருக்காய்ங்க.... இதுல ஜாலியா இருக்கேனா...* பொங்கலுக்கு அலங்காரம்...அலங்காரம் பண்ணாட்டியும் பரவாயில்லை... பஜ்ஜி, போண்டா பலகாரங்களை கண்ணுலயாவது காட்டுங்கய்யா.* பாலிடிக்ஸ் பண்ணுவீங்களா ?ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுன்னு சொல்லிக்கிட்டு நீங்க பண்ற 'பாலிடிக்ஸ்' போதாதா, இதுல நாங்க வேற பண்ணனுமா.* உங்க குரூப்களை கூப்பிடுங்க...ஒரு காளையவே தைரியமா பேட்டி எடுக்க முடியலயாம், இதுல உமக்கு ஒன்பது காளை கேட்குதா. பேசாம போறியா இல்லை, வாய்க்குள்ள கொம்பை விட்டு சுத்தவா* பஞ்ச் டயலாக் பிளீஸ்...இல்லாமை, முயலாமை, கல்லாமை கூட இருக்கலாம்... ஆனால், மனுஷனுக்கு பொறாமை மட்டும் இருக்கவே கூடாது... மொத்தத்துல மாடு மாதிரி பொறுமையா இருக்கணும், ஹேப்பி மாட்டுப் பொங்கல்.- த.ஸ்ரீனிவாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்