உள்ளூர் செய்திகள்

பொங்கல் டிட்பிட்ஸ்

* சூரியன், 9 கோள்களையும் குறுங்கோள்கள், சிறு கோள்கள், வால் நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விண்வெளிப் பொருட்களை உள்ளடக்கியது. * சூரியனின் ஈர்ப்பு விசையால் தான், பூமி தனது சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. * வடஅமெரிக்காவில் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய நடனம் நடத்தப்படுகிறது.* பீகாரில் தீபாவளியை அடுத்த ஐந்தாவது நாளில், நதிக்கரைகளில் சூரிய வழிபாடு செய்கிறார்கள். * ஒருவர் மரணமடைந்ததும், அவரது ஆத்மா சூரிய வட்டத்தை அடைந்து விடும் என வேதகால மக்கள் நம்பினர். * சூரியரதத்தில் பூட்டப்பட்டுள்ள ஏழு குதிரைகளுக்கு,காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.* சூரியனே ஆதிகால கடவுளாக மக்கள் கண்ணுக்குத் தெரிந்தார். எனவே அவரை 'ஆதித்யன்' என்று அழைத்தனர்.* சூரியனுக்கு மிகவும் பிடித்தது செந்தாமரை மற்றும் எருக்கம் பூ மாலை. இவருக்கு வில்வமாலை அணிவிப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்