உள்ளூர் செய்திகள்

ரஞ்சிதமே... ரஞ்சிதமே... அழகில் மின்னும் அஞ்சுகமே...

'ரஞ்சிதமே... ரஞ்சிதமே... என ராஷ்மிகா மந்தானா அழகை பார்த்து மட்டும் தான் பாடணுமா என்ன... அழகில் மின்னும் அஞ்சுகமாக அழகாக வலம் வரும் சீரியல், மாடலிங் அழகிகள், நம்மூர் பெண்களை பார்த்தும் பாடும் அளவிற்கு மேக்கப் செய்து அசத்தலாம் என்கிறார் செலிபிரட்டி மேக்கோவர் ஆர்டிஸ்ட் அனு...''இப்பெல்லாம் நம் ஊரில் மேக்கப், பேஷன் எல்லாம் டிரெண்டிங் ஆகி வருகிறது. சினிமா, சீரியல் நடிகைகள், மாடலிங் பெண்கள் என் போன்ற ஆர்டிஸ்டுகளிடம் மேக்கப் செய்ய விரும்புகிறார்கள். அப்படி ஊரடங்கில் பிரைடல் மேக்கப்பில் துவங்கிய என் பயணம் இன்று 'செலிபிரட்டி'களை நோக்கி செல்கிறது. சமீபத்தில் நடிகை கேப்பிரியலாவுக்கு லைட், பார்ட்டி லுக் மேக்கப், நடிகை ரவீணா தாவுக்கு கண்களை, இதழ்களை எடுப்பாக காட்டும் கிளாம் லுக், நடிகை தர்ஷனா குப்தா, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்காவுக்கு ஹேர் ஸ்டைல் செய்தேன்.நடிகை ஸ்ருதிக்கு கிராமத்து லுக் செம சூப்பராக இருந்தது. அதே லுக்குடன் மதுரை ரங்கன் என்பவர் வளர்க்கும் யானைகள் 'லட்சுமி, 'குஷ்மா'உடன் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் வைரல் ஆனது. நடிகைகள் போல் நம்மூர் இளம் பெண்களுக்கும் இது போன்று சினிமாடிக் மேக்கப் செய்யலாம்.நகம் அழகாக தெரிய விரும்பும் பெண்களுக்கு 'ரிமூவபுல்'செயற்கை மெழுகு நகங்களை பொருத்தலாம். இயற்கை நகம் போல் காட்சியளிக்கும் அதில் டிசைன், படங்கள் வரையலாம். மேக்கப் தவிர இது போன்று அழகியியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளது. இப்போ சொல்லுங்க கிரியேட்டிவிட்டி, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எந்த பொண்ணுக்கு மேக்கப் செய்தாலும் 'ரஞ்சிதமே'... ரஞ்சிதமே'என பாடத்தோணும் தானே''...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்