கலகல காமெடி பொங்கல்
கரும்பு கட்டு'மாமா வாங்க பானை உடைக்க போகலாம், நீங்க வந்தா தான் எனக்கு எனர்ஜியே வரும்','அப்பா...அவர் பேச்சை கேட்டு போயிடாதீங்க பானைன்னு நினைச்சு உங்க மண்டைய உடைச்சு பொங்கல் வைக்க பிளான் பண்றாரு'. 'மாப்பிள்ளை இங்க வாங்க கட்டுக் கட்டா கரும்பு வைச்சுருக்கேன் ஒரே அடில உடைச்சு காட்டுங்க பார்க்கலாம்''என்னப்பா நீங்க!அவரே அடைச்ச கடையா பார்த்து உடைச்ச சோடா கேட்குறவரு, அவர போய் இதை செய், அதை செய்னு போங்க பா போயி, நம்ம வீட்டு கிழவிகிட்ட கொடுங்க ஒரே அடில ஒன்பது துண்டா கரும்பை உடைச்சுப் போடும்'.அக்கறை சர்க்கரை'மாமா மாப்பிள்ளை மேல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. பொங்கல் சீர் கொடுக்கனும்னு நினைப்பே இல்லையா?, சர்க்கரை பொங்கல் மட்டும் கொடுத்து ஏமாத்திடாதீங்க''மாப்பிள்ளை இந்தாங்க பச்சரிசி, வெல்லம், கரும்பு, 100 ரூபாய் உங்களுக்குத் தான் சும்மா ஜமாய்ங்கோ','என்னம்மா உங்க அப்பாவுக்கு என் மேல இம்புட்டு பாசம், பொங்கல் சீர் எல்லாம் கொடுக்குறாரு','அட கடவுளே எங்கப்பாவே கஞ்ச பிசினாரி; அதான் ரேஷன் கடை அயிட்டத்தை தள்ளிவிட்டிருக்காரு, அது கூட தெரியாம இந்த மனுஷன் இப்படி பெருமை பேசிகிட்டு திரியுறாரு'.பொம்மை புலி'பொங்கல் பொங்கும் போது எங்கப்பா போனாரு உங்க மாப்பிள்ளை, அங்க பாரும்மா காளைகிட்ட போயி மல்லுக்கட்டிகிட்டு இருக்காரு', 'அம்புட்டு தைரியம் எங்கிருந்து வந்தது இவருக்கு, என்னங்க அது நிஜ காளையில்லை. காளை மாதிரி இருக்குற பொம்மை, ஓவரா சீன் போடாதீங்க வந்து பொங்கல சாப்பிடுங்க','கடைசி வரைக்கும் ஒரு மாவீரனா என்னை நிரூபிக்கலாம்னு பார்த்தா விடமாட்டாங்க போல, நம்ம சத்துக்கு காளை எல்லாம் சாதாரணம், நேரடியா புலியை அடக்க போக வேண்டியது தான்'.அடக்கி மடக்கி'மாப்பிள்ளை அப்படியே வந்து நம்ம வீட்டு காளையை அடக்குறது','யாரு அவரா? அட நீங்க வேற மாடு மூச்சுவிட்டாலே உங்க மாப்பிள்ளை 30 அடி தள்ளிப் போயி விழுவாரு, இவரு எங்க அடக்கப் போறாரு','ஆமா, ஆமா சரி தான் உங்க பொண்ணையே என்னால அடக்க முடியல இதுல...','என்னங்க அங்கே என்ன சத்தம்','ஒண்ணுமில்லை மா... புடவையை மடக்கிட்டு இருக்கேன்', 'ஹூம்ம்.. அடக்கத்தான் தெம்பில்லை அதையாவது ஒழுங்கா மடக்கி வைச்சா சரி தான்'.ஸ்ரீனி