உள்ளூர் செய்திகள்

சூரியனின் பி.ஏ.,

சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு 'சப்தா' என்று பெயர். சப்தா என்றால் 'ஏழு'. ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. ராசி விட்டு ராசி சஞ்சாரம் செய்வதே சூரியனின் தொழில்.இதனால் ஆற்றலுடன் ஓடும் சுபாவம் கொண்ட குதிரையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டியே, சூரியனுக்குரிய நித்ய கர்மாக்களை (தினமும் நடக்க வேண்டிய பணிகள்) வகுத்துக் கொடுப்பவர். இன்றைய நடைமுறையில் சொல்வதானால் சூரியதேவனின் 'பெர்சனல் அசிஸ்டன்ட்'. பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார். சூரியபுராணத்தில் இந்தத் தகவல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்