தை மகளே வருக!
பொங்கல் மணக்கப் புதுமஞ்சள் மணம்சிறக்கஎங்கள் தமிழரினம் எங்கும் உயர்ந்துநிற்ககங்கையுடன் வைகை காவிரியை இணைத்துவைக்கசங்கம் முழங்கத் தைமகளே நீவருக!செந்நெல் விளைய செங்கதலி இஞ்சியுடன்கன்னல் விளையக் கடலைக்கொடி விளையதென்னை விளையத் திராட்சைக்கனி விளையஅன்னைத் தைமகளே அமுதே நீ வருக!வாவியெல்லாம் செங்கமலம் வாய்திறந்து சிரித்திருக்கபூவிரியும் இடமெல்லாம் பொன்வண்டு கவிஇசைக்கநாவினிக்கப் பாவாணர் நற்றமிழில் வாழ்த்துரைக்கத்தாவிவரும் திருவே தைமகளே நீவருக!முன்பனிக் காலத்தை முடித்துவைக்கும் திருமகளேபின்பனிக் காலத்தை பிறக்கவைக்கும் பெருமகளேஉன்னால் கழனியுடன் உழவர்களின் சிறப்பையெல்லாம்தன்னால் அறியவைத்தாய் தைமகளே நீவருக!எண்ணியவை எல்லாம் ஈடேற நாம்செய்தபுண்ணியங்க ளெல்லாம் பொழுதும் துணைக்குவரகண்ணியம் தவறாமல் கடமைகள் ஆற்றிவரதண்மை மிகுந்தவளே தைமகளே நீவருக!எதிர்கால வாழ்க்கை இனிமை நிறைந்திருக்கஉதிர்காலம் கூட உள்ளத்தில் அமைதி தரபுதிரான உலகத்தில் புதுமைகள் பூத்துவரசதிராடும் தைமகளே தமிழ்மகளே நீவருக!- கவிஞர் முத்துலிங்கம்.