வெள்ளை மனசு
நல்ல மனிதனைக் குறிப்பிடும்போது, 'அவனுக்கு பாலைப் போல வெள்ளை மனசு' என்று குறிப்பிடுவர். குழந்தையின் சூதுவாது ஏதும் அறியாத தன்மையை, 'பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தை' என்பர். பாலைக் காய்ச்சக் காய்ச்ச தன் சுவையைக் கூட்டுவது போல, நல்லவனுக்கு துன்பம் நேர்ந்தாலும் தன் உயர்ந்த குணத்தை ஒருபோதும் விடுவதில்லை என்று அவ்வையார் நல்லவரை பசும்பாலோடு ஒப்பிடுகிறார். நிலாவினைக் குறிப்பிடும்போது, 'பால்நிலா' என்றே சொல்வர். கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் என்றாலே அது 'பாலபிஷேகம்' மட்டும் தான். இவ்வாறு உயர்ந்த குணத்தின் பிரதிபலிப்பாக பசுவின் பால் விளங்குகிறது.