ஏலம் மணக்கிற...
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்று. இதை இனிப்பு உணவு, கார உணவு என்று இரண்டிலுமே பயன்படுத்துவோம். இவ்வளவுதான் ஏலக்காய் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால், நமக்கு தெரியாத இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!* வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு தலைசுற்றுவது, மயக்கம் வருவது போன்றவை ஏற்படும். அதற்கு அரை டம்ளர் தண்ணீரில், நான்கு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கி குடிக்கலாம்.* வாய்வு பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காயை காய வைத்து, பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீரில், அரை ஸ்பூன் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிப்பது நல்லது.* நாவில் வறட்சி, மார்பு சளி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஒன்று, இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும் நிவாரணம் கிடைக்கும். ஆனால், அடிக்கடி மெல்லக் கூடாது.*குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்திக்கு, இரண்டு ஏலக்காயை பொடியாக்கி, தேனில் குழைத்து மூன்று வேளை நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.* விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீரில், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, அதோடு கொஞ்சம் புதினா போட்டு, கொதிக்க வைத்து குடித்தால் போதும்!