உள்ளூர் செய்திகள்

சீனாவில் பூனைப்படை!

சீனாவில் நாளுக்கு நாள் எலிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவற்றால் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமாவதால் நாட்டின் மொத்த விவசாயமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.எலிகளை எப்படி ஒழிப்பது என்பதுதான் அதிகாரிகளின் அன்றாட கவலையாகிப் போனது. ஜின்ஜியாங் மாநிலத்தில் போலே என்னும் நகரில் அதிகாரிகளால் கொண்டு வந்து விடப்பட்ட 150க்கும் மேற்பட்ட பூனைகள், எலிகளை துவம்சம் செய்தன.பூனைகளின் வருகைக்குப் பிறகு எலிகளின் அட்டகாசம் குறைந்தது கண்ட அதிகாரிகள், பூனைப் படையை அனைத்து நகரிலும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகளுக்கு என்னவெல்லாம் வேலை தர்றாங்கப்பா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !