குட்டீஸ் கார்னர்!
பொன், உலகத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பியது. வழியில் ஒரு உலைக் கூடத்தில் கருமான், இரும்பை பெரிய சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தான். வலி தாங்காமல் அழுதது இரும்பு.'என்ன செய்ய! எல்லா உலோகங்களும் அடி வாங்கப் பிறந்தவைதான். பெருமதிப்புள்ள எனக்கும் அடி விழுகிறது!'' என்றது பொன்.'நாம் இருவர் நிலையும் ஒன்றல்ல... உன்னை இன்னொரு பொன் அடிக்காது... இரும்புதான் அடிக்கும். அந்நியனால் துன்புறுவது பொது வழக்கம்தான். ஆனால், நானோ என் சகோதரனாலேயே அடிபடுகிறேனே!' என்று சொல்லி அழுதது இரும்பு. நியாயம்தானே.