உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

'லிவர் சிரோசிஸ்' என அழைக்கப்படும், கல்லீரல் சுருக்கப் பாதிப்பு ஏற்பட்டால், 'கோகோ நிறைந்த, பிரவுன் சாக்லேட் சாப்பிடலாம்...' என, நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.உணவு சாப்பிட்ட உடன், அடிவயிற்றில், ரத்த அழுத்தம், சாதாரணமாக அதிகரிக்கும். இது, கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மேலும் சிக்கலை உண்டாக்கும். அழுத்தம் அதிகமானால், ரத்த நாளம் வெடித்து விடும்.இதை தவிர்க்க, 11 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அனைவருக்கும், 'கோ கோ' அடங்கிய, சாக்லேட்டுகள், உணவாக கொடுக்கப்பட்டது பின், அவர்களது வயிற்றுப் பகுதியை ஆராய்ந்தனர்., ரத்த அழுத்தம் சிறிதளவே ஏறி இருந்தது. 'கோ கோ' கலக்காத உணவு சாப்பிடுபவர்களின் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !