உள்ளூர் செய்திகள்

ஹிட்லர் - மர்மம்! (4)

ஹிட்லரும், அவர் மனைவி இவாவும் இறந்ததுபோல, இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன.இதனையடுத்து, அவர்கள் இருவரும் பங்கரில் அமைக்கப்பட்டிருந்த இன்னொரு ரகசிய சுரங்கப் பாதை வழியாக வெளியே வந்தனர். அங்கு தயாராக இருந்த வாகனத்தின் மூலமாக நார்வே நாட்டை வந்தடைந்தனர். அங்கு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காத்திருந்தது. அதில் அவர்கள் இருவரும் ஏறி அர்ஜென்டினா நாட்டை நோக்கிப் பயணித்தனர்.இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த மிக முக்கியமான போர்த்தளபதிகள் ஏற்கனவே அர்ஜென்டினா சென்றிருந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் வரை இருக்கும்.எனவேதான் ஹிட்லர் அர்ஜென்டினா சென்றார் என்பது உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.ஜெர்மனிக்குச் சொந்தமான 'யு530' என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி அன்று அர்ஜென்டினா துறைமுகத்தை அடைந்தது.பின்னர் அதுபற்றிய விவரங்களை அமெரிக்கா கேட்டபோது, மாலுமிகள் மட்டுமே அதிலிருந்ததாக அர்ஜென்டினா கூறியது.பின்னர் ஐந்து வாரங்கள் கழித்து 'யு977' என்ற ஜெர்மனிக்குச் சொந்தமான மற்றொரு நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அர்ஜென்டினாவை அடைந்தது.இதுபற்றியும் அமெரிக்கா கேட்டபோது, அர்ஜென்டினா அதே பழைய கதையையே சொல்லியற்று.இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஹிட்லர் இறந்ததாக ரஷ்யா அதிகாரப் பூர்வமாக அறிவித்த 1945ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி அன்று, இதே 'யு977' நீர்மூழ்கிக் கப்பல் நார்வே துறைமுகத்தில் நின்றிருந்தது என்பது பிறகு உறுதி செய்யப் பட்டது.அப்படியானால் மே மாதம் 2ம் தேதி திடீரென மாயமாக மறைந்த அதே கப்பல் ஜூலை மாதம் கடைசியில் அர்ஜென்டினாவைச் சென்றடைந் திருக்கிறது. கிட்டத்தட்ட 100 நாட்களாகக் கடலுக்குள் அந்தக் கப்பல் பயணித்துள்ளது.அப்படியானால் அந்தக் கப்பலில் யார் வந்தார்கள்? ஜெர்மனி தோற்றுபோன அதே தருணத்தில் அங்கிருந்து மாயமாகி இருக்கிறது கப்பல்.ஆனால், இதுபோன்ற சந்தேகங்களுக்கு எந்தவிதமான பதிலையும் அளிக்காமல் வாய்மூடிக் கிடந்தது அர்ஜென்டினா.அந்தக் கப்பலில் ஹிட்லரும் அவரது மனைவி இவாவும் சில முக்கிய நாஸித் தலைவர்களுடன் சென்றதாக உறுதியாக நம்பப்படுகிறது. ஏராளமான பணம் மற்றும் தங்கக் கட்டிகளுடன் ஹிட்லர் சென்றதாகக் கூறப்படுகிறது.அதன் பின்னர் அர்ஜென்டினா நாட்டின் பல இடங்களில் ஹிட்லரைப் பார்த்ததாக சில ரகசியத் தகவல்கள் நம்பகத்தன்மையுடன் எப்.பி.ஐக்கு வந்தன. அங்கு ஹிட்லருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் அர்ஜென்டினாவிலேயே வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் கசிந்தன.'கிரே வொல்ப்' என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரால்ட் வில்லியம்ஸ் என்பவர் ஸ்கை நியூஸ் என்னும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாம் 1945ம் ஆண்டு ஹிட்லர் இறந்ததாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1962ம் ஆண்டு ஆர்ஜென்டினாவில் ஹிட்லர் வயதான நிலையில் இயற்கையான சாவை அடைந்தார் என்று கூறினார்.உண்மையிலேயே ஹிட்லர் தற்போது இறந்து போனார் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், 1945ம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுவதும், அர்ஜென்டினாவிற்குத் தப்பி வந்து 1962ம் ஆண்டு மாண்டதாகச் சொல்லப்படுவதும், இன்றுவரை விடை தெரியாத மர்மமாகவே உள்ளது.-முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !