உள்ளூர் செய்திகள்

நானும் கார் வாங்கிட்டேன்!

ஹென்றி போர்டுக்கு சிறு வயதில் இருந்தே கார் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். உலகிலேயே பெரிய கார் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை தர வேண்டும். அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து, மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று அவர் மனதில் நிறைய கனவுகள்.ஆனால், 16வது வயதிலேயே அவர் வேலைக்குப் போக வேண்டிய நிலை. 39 வயது வரை அவர் பல தொழிற்சாலை களில் வேலை பார்த்தார். 1903ஆம் ஆண்டு, தனது 40வது வயதில், போர்டு மோட்டார் கம்பெனியை ஆரம்பித்தார். அப்போது, அமெரிக்காவில் மட்டும் 50 கார் தொழிற்சாலைகள் இருந்தன. பயங்கரப் போட்டி, பணக்காரர்கள் மட்டுமே கார் வாங்குவார்கள் என்று எண்ணிய காலம் அது.'நடுத்தர வர்க்கத்தினரால் கார் வாங்க முடியவில்லை. அவர்கள் வாங்கக் கூடிய விலையில் நான் கார்களை உற்பத்தி செய்வேன்!' என்றார் போர்டு. 1908ஆம் ஆண்டு தமது கனவுகளை நனவாக்கினார். மாடல் 'கூ' என்ற காரை நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக் கூடிய குறைந்த விலையில் அறிமுகம் செய்தார். உற்பத்தி செலவைக் குறைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார். அதன் பலனாக வந்ததுதான், 'அசெம்பிளி லைன்' என்கிற தயாரிப்பு முறை. அசெம்பிளி லைன் முறையில், தொழிலாளர் தனித் தனியாக வரிசையாக இருப்பர். காரின் அடித்தள அமைப்புச் சட்டம் (இடச்ண்ண்டிண்) முதல் தொழிலாளியிடம் வரும். அதில், அவர் பிரேக்கை மட்டும் மாட்டுவார். அடுத்தவர் கிளச்சை மட்டும் போடுவார். கடைசி தொழிலாளியிடம் வரும்போது முழுக்காரும் தயாராகிவிடும்.இந்த புரட்சிகரமான முறையால், மற்றவர்கள் ஒரு காரைத் தயாரிக்க 3 மணி நேரம் எடுத்துக் கொண்ட போது, அதையே சரியாக 93 நிமிடங்களில் போர்டு கம்பெனி தயாரித்தது. 150 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனையாகி உலக வரலாற்றிலேயே சாதனை படைத்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் கார் உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்களின் சம்பளம் மாதம் 126 டாலர். அவர்கள் வாரம் 6 நாட்கள் உழைக்க வேண்டும். ஹென்றி போர்டு தமது தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை 180 டாலராக உயர்த்தினார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக்கினார்.சமுதாய உணர்வோடு தம் செல்வங்களை அவர் தொழிலாளர்களோடு பகிர்ந்து கொண்டார். நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்க வேண்டும் என்று தொலை நோக்கோடு உழைத்த அவருடைய முயற்சி, அமெரிக்காவில் மாபெரும் சமுதாய, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. கார்கள் வாங்கியதால் மக்களின் போக்குவரத்து வசதிகள் பெருகின; சாலைகள் வந்தன; வாணிபம் உயர்ந்தது; மக்கள் மகிழ்ந்தனர். ஒரு மனிதரின் நல்ல முயற்சியும், குணமும் எத்தனை மக்கள் பயன்பெற உதவியாக இருந்தது பார்த்தீர்களா? ஹென்றி போர்டு அங்கிளுக்கு ஒரு 'ஜே' போடுங்க குட்டீஸ்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !