உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 59; அரசு அதிகாரியாக பணிபுரிகிறேன். தினமலர் நாளிதழை, 15 ஆண்டு காலமாக வாசித்து வருகிறேன். இணைப்பு இதழ்களையும் ஆர்வத்துடன் தவறாமல் படிப்பேன். சிறுவர்மலர் இதழை படிக்கும் போது குழந்தையாகி விடுகிறேன். இதில், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியை படித்து தேவையானதை சேகரித்து, 'பைன்ட்' செய்து புத்தகமாக வைத்துள்ளேன். குடும்பத்துக்கு புதிய உணவு வகைகள் தயாரிப்பதற்கு, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி மிகவும் துணையாக உள்ளது. சிறுவர்மலர் இதழில் எந்த பகுதியையும் படிக்காமல் விட மனமில்லை. உண்மையில் இது ஒரு அறிவுச்சுரங்கம். சிறுவர், சிறுமியரை உற்சாகப்படுத்தி, வாசிப்பு ஆர்வத்தை துாண்டுகிறது. கையில் எடுத்து படித்தால், முடிக்காமல் வைக்க மனம் வருவதில்லை. உள்ளம் கொள்ளை கொள்ளும் சிறுவர்மலர் இதழ், அறிவுப்பசிக்கு நல்ல தீனி என்பதில் ஐயமில்லை!- எம்.கோமதி மீனாட்சி, மதுரை.தொடர்புக்கு: 94433 65368


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !