ஏப்ரல் - மே
தமிழகம்ஏப்., 2: தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ. 1000 வழங்கியது.மே 7: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பலி. 15 பேர் காயம். *அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக தமிழக அரசு உயர்த்தியது.மே 24: திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கி பாகன் காளிதாஸ் பலி. இந்தியாஏப்., 5: கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்புமாறு இந்தியாவிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை.ஏப்., 6: கொரோனா சிக்கன நடவடிக்கையாக பிரதமர், எம்.பி.,க்களுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் குறைப்பு. எம்.பி.,க்கள் தொகுதி வளர்ச்சி இரண்டு ஆண்டு நிறுத்தி வைப்பு.ஏப்., 11: இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மாநாடு டில்லியில் நடந்தது.ஏப்., 26: தலைமை லஞ்ச ஒழிப்பு ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சய் கோத்தாரி நியமனம்.மே 5: இந்திய - சீன ராணுவம் இடையே சிக்கிமின் நாதுலாவில் மோதல் ஏற்பட்டது.மே 6: காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி ரியாஜ் நைகூ சுட்டுக்கொலை.மே 7: கொரோனா காலத்தில் வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர 'வந்தே பாரத்' திட்டம் தொடக்கம்.மே 8: மும்பையில் சரக்கு ரயில் மோதியதில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி.மே 21: மேற்கு வங்கத்தில் 'ஆம்பன்' புயலால் 80 பேர் பலி.மே 22: உலக சுகாதார நிறுவன செயல் கூட்டத்தின் உறுப்பினராக (34 பேரில் ஒருவராக) மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு.மே 26: ஹிமாச்சலில் 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கபாதையை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி துவக்கினார். மே 27: அசாமில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எரிவாயு கசிந்ததில் இருவர் பலி.உலகம்ஏப்., 8: சீனாவின் வூகான் நகரில் 76 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கை தளர்வு.மே 7: ஈராக் பிரதமராக அல் காதிமி பொறுப்பேற்பு. மே 28: வங்கதேச தலைநகர் தாகாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பலி.மே 30: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது.இதுதான் 'டாப்'* ஏப்., 27: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம் 2021 ஜூன் வரை நிறுத்தி வைப்பு.* ஏப்., 30: ஐ.நா., வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியாக டி.எஸ்.திருமூர்த்தி நியமனம். * மே 7: ஆந்திராவின் விசாகபட்டினத்தில் ரசாயன நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் குழந்தை உட்பட 13 பேர் பலி.பயிர்களின் எதிரிமே 28: ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தின. இதன் ஆயுட்காலம் 6 -8 வாரம்.மீண்டும் கிம்மே 2: வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. 20 நாட்களுக்குப்பின் மக்கள் மத்தியில் தோன்றினார்.உதவும் குணம்மே 19: மதுரையில் யாசகமாக சேர்த்த ரூ. 2.20 லட்சத்தை கொரோனா நிதிக்காக பூல்பாண்டியன் வழங்கினார். இதற்கான சான்றிதழை கலெக்டரிடம் பெற்றார்.விமான விபத்துமே 22: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் தரையிறங்குவதற்கு, சில கி.மீ.,க்கு முன் விழுந்ததில் 97 பேர் பலி.இனவெறிக்கு எதிர்ப்புமே 26: அமெரிக்காவில் போலீசார் தாக்கி கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் நீண்ட நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.