உள்ளூர் செய்திகள்

பிப்ரவரி

தமிழகம்பிப்., 4: ஐந்து, எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.பிப்., 5: 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்., நிறுவனம், அதில் நடித்த நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.பிப்., 8: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே இந்தியா வருகை. பிப்., 20: தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதா நிறைவேற்றம்.* சென்னையில் 'இந்தியன் - 2' சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி.பிப்., 24: ஜெ., பிறந்த தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு கொண்டாடியது.பிப்., 27: திருவெற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி மறைவு. பிப்., 28: குடியாத்தம் தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் மறைவு.பிப்., 29: வேலுாரில் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை கலெக்டர் தினகரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. இந்தியாபிப்., 4: ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'மொகல் தோட்டம்' பொது மக்களுக்கு திறப்பு.பிப்., 5: கேரளாவில் 105 வயது மூதாட்டி 4ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி. பிப்., 10: ஜார்க்கண்டில் பா.ஜ., வுடன் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி இணைப்பு. பிப்., 13: உ.பி., யில் பஸ் - லாரி மோதியதில் 14 பேர் பலி. பிப்., 14 : நாட்டின் முதன்முதலாக மும்பை - புனே இடையே மின்சார பேருந்து அறிமுகம். * உ.பி., யின் வாரணாசி - ம.பி.,யின் உஜ்ஜயினி இடையே 3வது தனியார் ரயில் சேவை தொடக்கம். பிப்., 20: வளரும் நாடுகளின் 100 சிறந்த பல்கலை., பட்டியலில் சென்னை ஐஐடி உட்பட 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்தன.பிப்., 22: உலகில் அதிகம் பேர் பேசும் மொழிகளில் ஹிந்தி (61.5 கோடி) முதலிடம்.* சர்வதேச நீதித்துறை மாநாடு டில்லியில் நடந்தது. பிப்., 23: உ.பி.,யின் சோன்பத்ரா பகுதியில் 5.28 கோடி கிலோ தாது இருப்பை இந்திய புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்தது. பிப்., 26: பள்ளி, கல்லுாரிகளில் போராட்டம் நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை.* அதி நவீன ரோந்துக்கப்பல் 'வஜ்ரா' கடலோர காவல்படையில் சேர்ப்பு. * பிரான்சுக்கான இந்திய துாதராக ஜாவெத் அஷ்ரப் நியமனம். பிப்., 28: இந்தியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்துக்கு உலக வங்கி ரூ. 3,328 கோடி நிதி ஒதுக்கீடு. உலகம்பிப்., 1: காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் மாலத்தீவு மீண்டும் சேர்ந்தது. பிப்., 4: சீனாவின் வூகான் நகரில் 'கொரோனா' சிறப்பு மருத்துவமனை 10 நாட்களில் அமைப்பு. பிப்., 9: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் ராணுவ வீரர் சுட்டதில் 21 பேர் பலி.பிப்., 20: ஜெர்மனியின் ஹனாவ் நகரில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி. பிப்., 27: சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப்படை தாக்கியதில், 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலி. பிப்., 29: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா. புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம்.இதுதான் 'டாப்'* பிப்., 3: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. * பிப்., 19: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் ஸ்ரீநிவாசன் நியமனம். * பிப்., 28: ஆப்கனில் அமைதி ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் ஆப்கன் - தலிபான் - அமெரிக்கா கையெழுத்திட்டன.'நமஸ்தே' டிரம்ப்பிப்., 24: ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பு.மீண்டும் அதிபர்பிப்., 18: ஆப்கானிஸ்தானில் 2019ல் அதிபர் தேர்தல் நடந்தது. ஐந்து மாதங்கள் இழுபறிக்கு பின் அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார்.கெஜ்ரி 'ஹாட்ரிக்'பிப்., 16: டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில், 62ல் வென்ற ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்தது. மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வரானார்.கோவை சோகம்பிப்., 20: கோவை அவிநாசியில் கேரள அரசு பஸ் - கன்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் பலி.தமிழில் மந்திரம்பிப்., 5: ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சமஸ்கிருதத்துடன் தமிழிலும் மந்திரங்களை உச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !