உள்ளூர் செய்திகள்

மீண்டும் திரையில், சீமான்!

அ ரசியலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததால், சரத்குமார், கருணாஸ் போன்ற நடிகர்கள் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது, நாம் தமிழர் கட்சியின், சீமானும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே, நடிகர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தமிழ் படத்தில், அவருக்கு அப்பாவாக நடித்திருந்த, சீமான், தற்போது, சிவகார்த்திகேயன் நடித்து வரும், சேயோன் தமிழ் படத்திலும் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து அழுத்தமான வேடங்களில் நடிக்க, இயக்குனர்களிடம் தீவிரமாகக் கதைகளையும் கேட்டு வருகிறார். —  சினிமா பொன்னையா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !