தமிழக காவல்துறையில் 1299 எஸ்.ஐ., காலியிடங்கள்
தமிழக போலீசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா) 933, சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) 366 என மொத்தம் 1299 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 390 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கான பற்றாக்குறை காலியிடங்கள் 53 உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புவயது: 20-30 (1.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.உடல் தகுதி: உயரம் குறைந்தது170 செ.மீ., (பெண்கள் 159 செ.மீ.,). எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 167 செ.மீ., (பெண்கள் 157 செ.மீ.,)விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500கடைசிநாள்: 3.5.2025விவரங்களுக்கு: tnusrb.tn.gov.in