உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறையில் 1483 காலியிடங்கள்

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம ஊராட்சி செயலர் பதவியில் திருவள்ளூர் 88, புதுக்கோட்டை 83, திருச்சி 72, மதுரை 69, விழுப்புரம் 60, காஞ்சிபுரம் 55, சேலம் 54, செங்கல்பட்டு 52, சிவகங்கை 51, விருதுநகர் 50 உட்பட மொத்தம் 1483 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். வயது: 18-32 (1.7.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50 கடைசிநாள்: 9.11.2025 விவரங்களுக்கு: tnrd.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !