இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 200 காலியிடங்கள்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாக அதிகாரி பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் 100, ஜெனரலிஸ்ட் 100 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., /பி.டெக்., / சி.ஏ., / பி.எல்., / பட்டப்படிப்பு.வயது: 21-30 (30.9.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல்,திருச்சி, திருநெல்வேலி, வேலுார், திருப்பூர், விருதுநகர் உட்பட 24 இடங்களில் நடக்கிறது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 5.11.2024விவரங்களுக்கு: uiic.co.in