உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களில் 2423 காலியிடங்கள்

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வேயர் 197, ஜூனியர் இன்ஜினியர் 114, எம்.டி.எஸ்., 106,கெமிக்கல் அசிஸ்டென்ட் 56, உதவிதொடர்பு அதிகாரி 56, எச்.ஆர்., அசிஸ்டென்ட் 54, ஆய்வக உதவியாளர் 46, கிளார்க் 41, தொல்லியல்உதவியாளர் 45 உட்பட மொத்தம் 2423 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புதேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.6.2025விவரங்களுக்கு: ssc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !