உள்ளூர் செய்திகள்

தமிழக போலீசில் 3644 கான்ஸ்டபிள் காலியிடங்கள்

தமிழக போலீசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர் பிரிவில் காவல்துறை 2833, சிறை, சீர்திருத்தத்துறை 180, தீயணைப்பு மீட்பு பணி 631 என மொத்தம் 3644 இடங்கள் உள்ளன. இதிலிருந்து வாரிசுதாரர்கள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவை, தமிழ்வழிக்கல்விக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். வயது: 18-26 (1.7.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். தேர்வுகட்டணம்: ரூ.250 கடைசிநாள்: 21.9.2025 விபரங்களுக்கு: tnusrb.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !