எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை அமைப்பில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல் 153, கொத்தனார் 172, இரும்பு பணி 75, உணவு பரிமாறுபவர் 11 என மொத்தம் 411 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ., வயது:18-25 (24.2.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Commandant, GREF Centre, Dighi Camp, Pune - 411 015.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.2.2025விவரங்களுக்கு: marvels.bro.gov.in