எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு நீதிமன்றத்தில் வேலை
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில்அலுவலக உதவியாளர் 137, ரெசிடன்சியல் அசிஸ்டென்ட் 87, சுகாதார பணியாளர் 49, துாய்மை 73, தோட்டம் 24, வாட்ச்மேன் 4, ரூம் பாய் 4, உதவியாளர் 12 உட்பட 392 இடங்கள், பெர்சனல் அசிஸ்டென்ட் பிரிவில் 42, கிளார்க் 4 உட்பட 47 என மொத்தம் 439 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு, பெர்சனல் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி. வயது: 18-37 (1.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ஆபிஸ் அசிஸ்டென்ட் ரூ.500. மற்ற பிரிவுக்குமாறுபடும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.5.2025விவரங்களுக்கு: mhc.tn.gov.in