பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி
இந்தோ - திபெத் பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குரூப் 'சி' பிரிவில் தடகளம் 25,சைக்ளிங் 14, கோ - கோ 10,நீச்சல் 7, துப்பாக்கி சுடுதல் 7, பளுதுாக்குதல் 7, குத்துச்சண்டை 5, வில்வித்தை 6 உட்பட 133 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புவயது:18-23 (2.4.2025ன் படி)கூடுதல் தகுதி: தேசிய, சர்வதேச போட்டிகளில் சான்றிதழ்தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 2.4.2025விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in