தமிழக சட்டக்கல்லுாரியில் பேராசிரியர் பணி
தமிழக சட்டக்கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.சொத்து, கிரிமினல், தொழிலாளர், வரி, ஐ.டி., மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகள், ஆங்கிலம், சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் உதவி பேராசிரியர் 124, இணை பேராசிரியர் 8 என மொத்தம் 132 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை பட்டம், பி.எச்டி.,வயது: உதவி பேராசிரியர் 40, இணை பேராசிரியர் 45 (1.7.2025ன் படி)விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.கடைசிநாள்: 3.3.2025விவரங்களுக்கு: trb.tn.gov.in