சி.ஆர்.பி.எப்., படையில் ஸ்டெனோ பதவி
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் படையாகும். உள் நாட்டு அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதிலும், தேர்தல் போன்ற நேரத்தில் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதும் இந்தப் படையில் தலையாய பணியாகும். ஊரடங்கு, கலவர நேரங்களிலும் இந்தப் படையினர் தலையாய பங்காற்றுகின்றனர். இந்தப் படையில் ஸ்டெனோ பிரிவில் காலியாக இருக்கும், 219 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: சி.ஆர்.பி.எப்., படையில் ஸ்டெனோ பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி டிக்டேஷனில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை ஷார்ட் ஹேண்ட் செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 60 நிமிடங்களிலும் டிரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் திறமை தேவைப்படும்.உடல் தகுதி: காவல் படை சார்ந்த பதவி இது என்பதால் உயரம், எடை, கண்பார்வை போன்ற கூடுதல் உடல் சார்ந்த தகுதிகளும் தேவைப்படும். ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ.,யும், பெண்கள் குறைந்தபட்சம் 155 செ.மி.,யும் உயரம் பெற்றிருப்பதோடு இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-ஐ ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.தேர்ச்சிமுறை: எழுத்துத் தேர்வு, திறனறியும் தேர்வு, நேர்காணல், உடல் தகுதி மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள்: 25.04.2017.விபரங்களுக்கு: www.crpfindia.com