பத்தாம் வகுப்பு தகுதிக்கு விமானப்படையில் வேலை
தொழில் நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த பாதுகாப்புப் படையான இந்திய விமானப் படையில் குரூப் சி சார்ந்த 154 சிவிலியன் பணியிடங்களில் ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: காப்பர் ஸ்மித் / ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் 1, பெயின்டரில் 3, கார்பென்டரில் 5, லெதர் ஒர்க்கரில் 1, டெய்லரில் 1, லோயர் டிவிஷன் கிளார்க்கில் 11, ஸ்டோர் கீப்பரில் 25, குக் பிரிவில் 3, தோபி பிரிவில் 1, மெஸ் ஸ்டாப் பிரிவில் 6, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் 62, சபாய் வாலாவில் 25, வார்டு ஷகாயிகாவில் 1, அம்யூனிஷன் டியூடி லேபரில் 4, பயர் மேனில் 4 சேர்த்து மொத்தம் 154 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: இந்திய விமானப் படையின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் கட்டாயம் பயிற்சி மற்றும் திறன் தேவை. நல்ல உடல் தகுதி கூடுதல் தேவையாக இருக்கும். தீயணைப்பு தொடர்பான பயிற்சியும் பெற்றிருப்பது தேவைப்படும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், பிராக்டிகல் டெஸ்ட், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். AOC. Equipment Depot Air Force Station Avadi. Avadi IAF (Post). Chennai கடைசி நாள் : 31.03.2017இணையதள முகவரி: http://www.davp.nic.in/WriteReadDataADSadi_10801_107_1617b.pdf