கப்பல் படையில் பைலட் ஆக விருப்பமா
இந்தியாவின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் முக்கிய பாதுகாப்புப் படையான இந்திய கப்பல் படை சர்வ தேச அளவில் தொழில் நுட்ப ரீதியாகவும், அர்ப்பணிப்புடைய சேவைகளுக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் படையில் எஸ்.எஸ்.சி., பைலட்களையும், ஏ.டி.சி.,க்களையும், பைலட் (எம்.ஆர்., தவிர்த்து) பணி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து உச்ச பட்ச வயதில் மாறுதல் உள்ளது. மூன்று பதவிகளுக்கும் கீழ் நிலை வயதாக 02.01.1993க்குப் பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச வயதைப் பொறுத்தவரை ஏ.டி.சி., க்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.1997க்கு முன்னரும், இதர இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 1.1.199௯க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: இந்தப் பதவிக்கு இன்ஜினியரிங் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். . இதர தேவைகள்: ராணுவம் தொடர்புடைய பதவி என்பதால் இந்தப் பதவிக்கு குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 162.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். தீர்க்கமான கண்பார்வை கொண்டவராக இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., இண்டர்வியூ மூலமாகவும், உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வுகள் மூலமாகவும் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 31.03.2017விபரங்களுக்கு: http://www.joinindiannavy.gov.in/en/event/officer-entry-ssc-ssc-pilot-other-than-mr-ssc-ssc-pilot-mr-ssc-ssc-atc-01-2018.html