சவுடு மண்ணிலும் வளரும் அசாம் காஜி லெமன்
அசாம் காஜி லெமன் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறண்ட பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.அந்த வரிசையில், அசாம் மாநிலத்தில் விளையும் காஜி லெமன் சாகுபடி செய்துள்ளேன். இது மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு நன்றாக வளரும் தன்மை உடையது.நம் ஊர் மணல் கலந்த களிமண், சவுடு மண் உள்ளிட்ட பல வித மண்ணிலும் காஜி லெமன் மரம் ஊட்டத்துடன் வளர்கிறது.குறிப்பாக, நம்மூரில் விளையும் லெமன் உருளையாக இருக்கும். இந்த காஜி லெமன் விரல் நீளத்திற்கு விளையும். இதை ஜூஸ் மற்றும் ஊறுகாய்க்கு பயன்படுத்தலாம்.சந்தையில் இந்த புதிய விதமான பழங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:கே.சசிகலா,72005 14168.