மலை மண்ணிலும் பிளாக் பெர்ரி பழம் சாத்தியம்
பிளாக் பெர்ரி பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மலை மண் சார்ந்த செம்மண்ணில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், பிளாக் பெர்ரி பழம் ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, படரும் தன்மை உடைய செடியாக உள்ளது. நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளர்கிறது. நம்மூர் மலை சார்ந்த செம்மண்ணுக்கு நன்றாக வளர்கிறது. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.குறிப்பாக, பிளாக் பெர்ரி பழத்தில், குறைந்த கலோரிக்கள் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. மேலும், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல், நினைவாற்றல் மேம்படுத்துதல் அகியவை இருப்பதால், சந்தையில் விற்பனைக்கு பஞ்சமும், வருவாய் குறைவும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:கே.வெங்கடபதி93829 61000.