உள்ளூர் செய்திகள்

கூடுதல் எடை தாய்லாந்து கிங் சப்போட்டா

தாய்லாந்து கிங் சப்போட்டா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், தாய்லாந்து கிங் ரக சப்போட்டா பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். இந்த ரக சப்போட்டா பழம், பிற சப்போட்டா பழங்களை காட்டி லும், சற்று பெரிதாக இருக்கும்.இந்த பழத்தின் சுவை, அதிக இனிப்பாக இருக்கும். சப்போட்டா பழங்களில் இருக்கும் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்து இருக்கும்.குறிப்பாக, ஒவ்வொரு சப்போட்டா பழமும், 400 கிராம் எடை வரையில் வளரும் தன்மை உடையது. பிற ரக சப்போட்டா, 100 கிராம் எடை இருக்கும்.இந்த தாய்லாந்து ரக சப்போட்டா கூடுதல் எடையால், அதிக மகசூல் ஈட்ட முடியும். இது, கூடுதல் வருவாய்க்கு வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,94441 20032.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !