அதிக சுவைக்கு இமாம் பசந்த் மாம்பழம்
இமாம் பசந்த் மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, பல வித பழங்களின் மரக்கன்றுகள் சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், இமாம் பசந்த் மா மரத்தை சாகுபடி செய்யலாம். குறிப்பாக, மாம்பழங்களின் சீசனுக்கு முன்னதாகவே, செந்துாரம் ரக மாம்பழம் காய்க்க துவங்கும். இதையடுத்து, இமாம் பசந்த் ரக மாம்பழங்கள் காய்ப்பு வரும். இதன் சுவை தனி சிறப்புடையதாக இருக்கும். பிற ரக மாம்பழங்களில் சற்று புளிப்பு தன்மை இருக்கும். இந்த இமாம் பசந்த் ரக மாம்பழத்தில் புளிப்பு தன்மை அறவே இருக்காது. இந்த பழத்திற்கு, சந்தையில் அதிக வரவேற்பு பெற்றிருப்பதால், கூடுதல் விலையும் கிடைக்கிறது. இந்த பழத்தை விரும்பி வாங்குவோர், கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400