உள்ளூர் செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்பனையாகும் மணிலா ரக வாத்துக்குஞ்சுகள்

மணிலா ரக வாத்து வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி விவசாயி க.ஜெகத்ரட்சகன் கூறியதாவது:வாத்து வளர்ப்பில், இறைச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரு விதமான வாத்துகளை வளர்க்கலாம். இறைச்சி வாத்தை பொறுத்தவரையில், 2 கிலோவிற்கு மேல் எடை வராது. இதை, இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.அதுவே, இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும், மணிலா ரக வாத்து இறைச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரு விதங்களிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக, மணிலா வாத்து, முட்டை இட்டு அடைகாக்கும் தன்மை உள்ளது. இதனால், இந்த ரக வாத்து இனப்பெருக்கத்திற்கு அதிகமாக உபயோகப்படுத்தலாம். மணிலா வாத்துகளை இனப்பெருக்கத்திற்கு உபயோகப்படுத்தும் போது, வாத்துக்குஞ்சுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம். இறைச்சி மற்றும் முட்டையிலும் அதிக வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: க. ஜெகத்ரட்சகன், 98942 29580.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !