உள்ளூர் செய்திகள்

ஊடு பயிராகும் பாரி ரக சாத்துக்குடி

பாரி ரக சாத்துக்குடி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனது நிலம் மலை மண் சார்ந்த செம்மண் நிலமாகும். இந்த மண்ணில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், பாரி ரக சாத்துக்குடி பழச்செடிகளை, டிராகன் தோட்டத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளர்கிறது. நம்மூர் செம்மண்ணுக்கு நன்றாக வளர்கிறது.பாரி ரக சாத்துக்குடி ஜூஸ் போடுவதற்கு ஏற்ற ரகம் என, கூறலாம். பழம் பெரிதாகவும், அதிகமான சாறும் கிடைக்கிறது. இது, பிற ரக சாத்துக்குடி பழங்களைக் காட்டிலும், தோல் மெலிதாக இருக்கும். மகசூல் மற்றும் வருவாயும் கணிசமாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.வெங்கடபதி93829 61000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !