உள்ளூர் செய்திகள்

கேழ்வரகில் குலை நோய் கட்டுப்படுத்த கரைசல்

கேழ்வரகில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம், தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:சிறு தானியங்களில்,ராகி என அழைக்கப்படும் கேழ்வரகு சிறந்த தானியமாக கருதப்படுகிறது. இதை குலை நோய் என அழைக்கப்படும், 'பைரிகுலேரியா கிரிசியா' என்பது காற்றில் பரவும் நோயாகும்.அதிக வெப்பம், அதிக ஈரம் ஏற்படும் போது, இந்நோய் பரவக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாக்கும். இது, நாற்று நட்டு இரு வாரங்கள் கழித்து ஆரம்பிக்கும். நீள் வட்ட வாக்கில் புண்கள் மற்றும் கழுத்து கணுப்பகுதிகளில் காணலாம். இது, கேழ்வரகு கதிரை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். வயல் களை செடிகள் இன்றி துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.கேழ்வரகு விதைகளை, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அல்லது பேசில்லஸ் ஸப்டிலிஸ், 10 கிராம் விதை நேர்த்தி செய்யலாம். அதே மருந்தினை இரு முறை இலைகள் வழியாக தெளிக்கலாம்.ஒரு கிலோ கேழ்வரகு விதைக்கு, 2 கிராம் கார்பன் டெஸும் விதை நேர்த்தி செய்யலாம். குலை நோய் அறிகுறி தெரிந்தால், ஒரு ஏக்கருக்கு 80 கிராம் டெபுகொனோசொல் டிரைப்ளாக்ஸிஸ் டோரோபின் பூஞ்சான கொல்லி பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,திரூர் நெல் ஆராய்ச்சி மையம்,திருவள்ளூர்.97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !