உள்ளூர் செய்திகள்

செம்மண்ணில் விளையும் ரெட் சீத்தாப்பழம்

ரெட் சீத்தாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், ரெட் சீத்தாப்பழத்தை, நம்மூர் செம்மண்ணில் சாகுபடி செய்யலாம். இது, மூன்று ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.இந்த ரெட் சீத்தாப்பழ மரங்களை நடும்போது, தண்ணீர் தேங்காத மேட்டுப்பகுதிகளில் நட வேண்டும். அப்போது தான் செடிகளின் சேதத்தை தவிர்க்க முடியும். மரமும், செங்குத்தாக வளரும்.குறிப்பாக, களர் உவர் மண் நிலத்தில், பழவகை மரங்களை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.இந்த ரெட் சீதா பழத்தின் தோல் மட்டும் சிவப்பாக இருக்கும். உள்ளே இருக்கும் சதை பற்றில், அனைத்துவிதமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால், மக்கள் கூடுதல்விலை கொடுத்துவாங்கவும் தயக்கம் காட்டுவதில்லை.மேலும், மாடித் தோட்டத்திலும், ரெட் சீத்தாப் பழ மரத்தை சாகுபடி செய்யலாம். அதற்கு ஏற்ப மரக்கிளைகளை கவாத்து செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:-கே.சசிகலா,72005 14168.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !