கூடுதல் வருவாய்க்கு சதாயூ ரக நெல்
'சதாயூ' சன்ன ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி டி.விவேகானந்தன் கூறியதாவது:'சதாயூ' சன்ன ரக நெல்லை, இயந்திர நடவு முறையில் சாகுபடி செய்துள்ளேன். இது, 100 நாளில் மகசூல் கொடுக்கக்கூடிய குறுகிய கால பயிர் ரகமாகும்.இந்த ரக நெல்லில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மிகவும் குறைவாக இருக்கிறது. உரம் மற்றும் நீர் மேலாண்மையை முறையாக கையாண்டால், ஏக்கருக்கு, 30 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இந்த, 'சதாயூ' சன்ன ரக நெல்லுக்கு, சந்தையில் எப்போதும் கூடுதல் விலை கிடைக்கிறது. உதாரணமாக, மகேந்திரா சன்ன ரக நெல் மூட்டை, 1,700 ரூபாய்க்கு விற்பனையாகும் போது, 'சதாயூ' ரக நெல் மூட்டை, 2,000 ரூபாய் வரையில் விலை கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: டி.விவேகானந்தன்,90920 21491.