கால்நடைகளுக்கு உகந்த சிறுதானிய தீவனங்கள்
ஆடு, மாடுகளுக்கு, சிறுதானியங்களை தீவன மாக வழங்குவது குறித்து, காஞ்சிபுரம்மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்கே.பிரேமவல்லி கூறியதாவது:கோடைக் காலங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படும். இதைத் தவிர்க்க, கோடைக்கால தீவன தட்டுப்பாட்டினை சமாளிக்க சிறு தானியங்களை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.குறிப்பாக, கேழ்வரகு, கம்பு ஆகிய சிறு தானியங்களை 50 சதவீதம் சேர்த்து, ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்கலாம். இதுதவிர, கோதுமை தவிடு, கடலை மற்றும் பயறு வகைகளை தீவனத்துடன் சேர்த்து வழங்கலாம். இதன் வாயிலாக, தீவன தட்டுப்பாடு தவிர்க்க வழி வகுக்கும். மாடு வளர்ப்பில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.அதேபோல தான், ஆடுகளுக்கும் சிறு தானியங்களை தீவனங்களாக வழங்கும்போது கூடுதல் எடை கிடைக்கும். அதன் வாயிலாக ஆடு விற்பனையில் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:கே.பிரேமவல்லி,97907 53594.