பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்த கரைசல்
பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சு.ம.சுரேஷ்குமார் கூறியதாவது:பார்த்தீனியம் வெளிநாடு விதைகளில் இருந்து, இந்தியாவிற்கு ஊடுருவிய களைச்செடி. ஒரு களைச்செடி, 40,000 விதைகளை உற்பத்தி செய்து, வயலின் பல்லுயிர் பெருக்கத்தை பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படுத்துகிறது.மேலும், ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் மற்றும் வயலில் வேலை செய்யும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகள், ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.இதை கட்டுப்படுத்த, பார்த்தீனிய களைச்செடியை வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். உப்பு கரைசலை தெளிக்கலாம்.இதுதவிர, அட்ராசின், கிளைபோசேட், மெட்ரிபூசன் ஆகிய களைக் கொல்லிகளைப் பயன்படுத்தி, பார்த்தீனியம் செடிகளை வளர விடாமல் தடுக்க முடியும்.இவற்றை கட்டுப் படுத்த, 10 மில்லி கிளைபோசேட், 20 கிராம் அம்மோனியம் சல்பேட், 2 லிட்டர் சோப்பு திரவம் கலந்து தெளிப்பான் மூலமாக தெளிக்கலாம்.இதுபோல செய்யும் போது, களை கட்டுப்படுவதுடன், பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கும். விளை பொருட்களுக்கு பாதிப்பு இன்றி மகசூல் எடுக்க வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: சு.ம.சுரேஷ்குமார்,94432 92203.